ஒவ்வொரு உணவு பொருளுக்கும் ஒரு தனி தன்மை உண்டு. சில உணவுகளை எல்லா
நேரங்களிலும் சாப்பிடலாம், சில உணவுகளை காலை நேரத்தில் மட்டும் தான்
சாப்பிட வேண்டும், சில உணவுகளை இரவில் ஒரு போதும் சாப்பிடவே கூடாது...
இப்படி பல தன்மைகள் உணவுகளுக்குள் இருக்கும். அந்த வகையில் நாம் சாப்பிட
கூடிய உணவுகளின் நேரம் மிக அவசியம்.
குறிப்பாக இரவு நேரத்தில் சாப்பிட கூடிய உணவுகளில் நாம் மிக கவனமாக
இருத்தல் வேண்டும். ஆனால், உண்மையிலே சில உணவுகளை இரவில் சாப்பிடுவதால்
பலவித மாற்றங்களும், நன்மைகளும் உடலில் நடக்கும் என ஆராய்ச்சிகள்
சொல்கின்றன. குறிப்பாக யோகர்ட்டை படுக்கைக்கு முன் சாப்பிட்டால் நீங்கள்
எதிர் பார்ப்பதை விட பல்வேறு நன்மைகள் கிடைக்குமாம்.
யோகர்ட்டை இரவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, இதனை
எவ்வாறு சாப்பிட்டால் பலன் அதிகம், எந் நேரத்தில் யோகர்ட் சாப்பிட்டால்
சிறந்தது போன்ற ஏராளமான தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
தயிரா? யோகர்ட்டா..?
பலருக்கும் ஒரு பொதுவான கருத்து உள்ளது. அதாவது, யோகர்ட்டும் தயிரும்
ஒன்று என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இது அப்படி கிடையாது.
யோகர்ட் வேறு, தயிர் வேறு என்பதே உண்மை. காரணம் இவை இரண்டிலும் உள்ள
ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் பெரிய அளவில் வேறுபட கூடும். அதே போன்று
இவை தயாரிக்கும் முறையும் மாறுபடும்.
யோகர்ட் சத்துக்கள்
தயிரை காட்டிலும் யோகர்ட் அதிக ஆரோக்கியம் நிறைந்துள்ளது என
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வைட்டமின்கள், கால்சியம்,
பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம் போன்றவை அதிக அளவில் இதில் உள்ளது. உடல்
எடையை விரைவாக குறைக்க யோகர்ட்
உடல் எடை
உடல் எடை பிரச்சினைக்கு என்னென்னவோ வழிகளை தேடுவோருக்கு சிறந்த வழியாக
இருப்பது யோகர்ட் தான். தூங்க போகும் முன் யோகர்ட் சாப்பிட்டால் வயிற்றில்
உள்ள உணவுகளை விரைவாக செரிக்க செய்து உடல் எடையை கூடாமல் பார்த்து
கொள்ளும்.